Saturday, 26 April 2014

போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கும் எண்ணும் மையத்தை சுற்றி 3 அடுக்கு பாதுகாப்பு

திருச்சி,: திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் போலீஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதோடு, வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி 3அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடந்தது. இதில் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 13,86,381 வாக்காளர்களில் 9,85,791 பேர் வாக்களித்தனர். வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி யில் 239, மேற்கு 256, ஸ்ரீரங் கம் 294, திருவெறும்பூர் 269, புதுக்கோட்டை 230, கந்தர்வகோட்டை 209 என 1,497 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிந்தது அனை த்து வாக்கு சாவடிகளிலும் உள்ள 1,497 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 2,994 வாக்குப்பதிவு இயந்திரங்களும வேட்பாளர்களின் முகவர் கள் மற்றும் அதிகாரிகளின் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடை பெற உள்ள சாரநாதன் பொறியியல் கல்லூரிக்கு நேற்று காலை வரையிலும் கொண்டு செல்லப்பட்டது. 
பின்னர் பஞ்சப்பூர் சார நாதன் பொறியியல் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அங்கு சட்டமன்ற தொகுதி வாரியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு அறையில் பாதுகாப்பாக வைக்கப் பட்டு, கட்சி வேட்பாளர்க ளின் முகவர்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைக் கப்பட்டது.
திருச்சி தொகுதி நாடாளுமன்ற தேர்தல் பொதுப்பார்வையாளர் ஹரேந்திரநாத் போரா, தேர்தல் அதிகாரி ஜெயஸ்ரீ,உதவி தேர்தல் அலுவலர்கள் பஷீர், ஜனனி சௌந்தர்யா, பாஸ்கரன், மணி, ஜெயராஜ், ராஜாராமன், அதிமுக வேட்பாளர் குமார், சுயேட்சை வேட்பாளர் பாலகிருஷ்ணன், கட்சி முகவர்கள் ஜோசப் ஜெரால்டு ஓம்பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தேர்தல் அதிகாரி ஜெயஸ்ரீ கூறுகையில், வாக்கு எண்ணிக்கை மே 16ம் தேதி காலை 8 மணிக்கு துவங்குகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மைய த்தை சுற்றி 3 அடுக்கு போலீஸ் பாது காப்பு போட ப்பட்டு உள் ளது. இதில் வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பாக வைக் கப் பட்டுள்ள கட்டிடத்தில் முதல் அடுக்கில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவம், இதற்கு அடுத்ததாக 2வது அடுக்கில் மத்திய சிறப்பு பாதுகாப்புபடை போலீ சார், 3வது அடுக்கில் உள் ளூர் போலீ சாரும் 24 மணி நேர மும் தீவிர கண்காணிப் பில் ஈடுபட்டு உள்ளனர் என் றார்.சிசிடிவி மூலமும் கண்காணிப்பு
மேலும் ஜெயஸ்ரீ கூறுகையில், வளாகம் முழுவதும் 24 மணிநேரமும் தடையின்றி மின்சார வசதியும், கண்காணிப்பு கேமராவும் ஆங்காங்கே பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. காவல் துறையினருடன் அரசியல் கட்சி வேட்பாளர் சார்பில் கண்காணிப்பு பணிக்காக கல்லூரி வளாகத்தில் தங்கி இருக்கலாம். 6 சட்டமன்ற தொகுதியின் பாதுகாப்பு அறையும் ஒரே இடத்தில் இருந்தும் நேரடியாக சிசிடிவி மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றார்.

No comments:

Post a Comment